Load Image
dinamalar telegram
Advertisement

கம்பங்கள் இருக்கு; மின் விளக்கு இல்லை

Tamil News
ADVERTISEMENT
கனகம்மாசத்திரம்:ரங்காபுரம் -- ராமாபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ரங்காபுரம். இந்த கிராமத்தின் வழியாகவே ராமாபுரம், இலுப்பூர், ஆற்காடு குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திருவாலங்காடு ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கிராம சாலையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால், எந்த கம்பத்திலும் மின் விளக்குகள் இல்லை.இதனால், வெளிச்சம் இல்லாம் இருள் சூழ்ந்து கிடப்பதால், பணிக்கு சென்று இரவில் வீடு திரும்புவோர் மிகவும் அச்சப்படுகின்றனர்.

இருட்டை பயன்படுத்தி சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாகவும், பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாகவும், கிராமத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனால், கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்த, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement