கொரோனா தடுப்பூசி; இன்று சிறப்பு முகாம்
செங்கல்பட்டு-செங்கல்பட்டு மாவட்டத்தில், 'கொரோனா' தடுப்பூசி முகாம், 810 இடங்களில் இன்று நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்கள்.தாம்பரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், கொரோனா தடுப்பூசி தினமும் செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த, முதல் தவணை, இரண்டாம் தவணை, 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.தொடர்ந்து, மாவட்டத்தில் 32வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 810 இடங்களில், இன்று நடக்கிறது.அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 3,054 ஊழியர்கள், பணியில் ஈடுபடுகின்றனர். முதல் தவணை, இரண்டாம் தவணை, 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்தாதவர்கள், இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என, சுகாதார துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!