பகுதி நேர ஆசிரியர் பணி; சிற்ப கல்லூரியில் வாய்ப்பு
மாமல்லபுரம்-மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரியில், பகுதி நேர ஆசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில், கலை, பண்பாட்டுத் துறையின்கீழ், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது.இதில் கற்சிற்ப ஆசிரியர், கட்டடக்கலை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், கணினி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு, 2022 - 23ல், பகுதி நேர அடிப்படையில் பணிபுரிய, தகுதிவாய்ந்த நபர்கள், மாதம் 15,000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.இக்கல்லுாரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிப்பதாக அறிவித்துள்ள கல்லுாரி நிர்வாகம், விருப்பம் உள்ளோர், ஆக., 10க்குள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கவும் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!