நீர்நிலையை ஆக்கிரமித்த 11 கடைகள் அகற்றம்
மறைமலை நகர்-மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 கடைகள் அகற்றப்பட்டன.மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி பகுதியில், தாங்கல் ஏரியை ஒட்டியுள்ள நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து, வணிக கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.நீதிமன்ற உத்தரவு காரணமாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக, சில நாட்களுக்கு முன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.அவர்கள் கண்டுகொள்ளாததால், செங்கல்பட்டு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குஜராஜ் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் 'பொக்லைன்' இயந்திரம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்றனர்.அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்கள், 'கடைகளை மட்டும் இடியுங்கள்; வீடுகளை நாங்களே காலி செய்துவிடுகிறோம்' என்றனர். இதையடுத்து, 11 கடைகளை மட்டும், 'பொக்லைன்' இயந்திரத்தால் இடித்து அகற்றினர்.பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தாங்கல் ஏரி பகுதியில் இருந்த 11 கடைகள் இடிக்கப்பட்டன். வீடுகளை இடிக்காமல் இருக்க, இரண்டு நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.கடந்த 2016ல் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து தார் சாலை, தைல மரங்கள் ஆகியவற்றை நட்டுள்ளன.மேலும் ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள போலீஸ் பூத், நீர்வழிப்பாதையை சேர்ந்தது. அடுத்தக்கட்டமாக அவற்றையும் அகற்ற உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!