இருளில் மதுரவாயல் புறவழிச் சாலை: தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
போரூர்--தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில் மின் விளக்கு அமைக்க கோரி, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், போரூர் சுங்கச் சாவடியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை பெருங்களத்துார், நெல்லுார், கோல்கட்டா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் சாலையாக, மதுரவாயல் புறவழிச் சாலை உள்ளது.இச்சாலை வழியாக, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், போரூர் அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது.இந்த நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்காததால், இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால், விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், மதுரவாயலில் இருந்து போரூர் செல்லும் சர்வீஸ் சாலை பணிகள் முடியாமல் உள்ளது. இதை கண்டித்து மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் பைபாஸ் சாலையில் டார்ச் லைட் அடித்தும், தீப்பந்தம் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளாக மின் விளக்கு இன்றி இருள் சூழ்ந்துள்ளது. இதனால் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. மத்திய போக்குவரத்து துறை, மூன்று மாதத்திற்குள் 60 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடி அகற்றப்படும் எனக் கூறி நான்கு மாதங்கள் கடந்து விட்டன.ஆனால், இச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி இன்னும் அகற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!