நெடுஞ்சாலையோர கட்டடங்களில் மெகா சைஸ் பேனர்கள்
திருமழிசை-திருமழிசை பகுதியில், நெடுஞ்சாலையோரம் 'மெகா' சைஸ் பேனர்கள் பெருகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெடுஞ்சாலையோரம் பேனர்கள் வைக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில், திருமழிசை -- ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையோரம், திருமழிசை, வெள்ளவேடு, புதுச்சத்திரம், நேமம், அரண்வாயல், மணவாள நகர் உட்பட பல இடங்களில் கட்டடங்களில், 'மெகா' சைஸ் பேனர்கள் மற்றும் மொபைல்போன் கோபுரங்கள் வைக்கப்படுவது தற்போது பெருகி வருகிறது.இது குறித்து, காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது இவ்வாறு பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் கட்டடங்கள் மீது வைக்கப்படும் பேனர்கள், மொபைல்போன் கோபுரங்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!