சிறுவாபுரி முருகன் கோவில்உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்
ஊத்துக்கோட்டை--சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், 71.32 லட்சம் ரூபாய் இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.பெரியபாளையம் அடுத்த, சிறுவாபுரி ஊராட்சியில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.இக்கோவிலில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துதிரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர்.இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக பணம் போடுவதற்கு, 10 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இக்கோவிலில் வரும், 21ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதையொட்டி, நேற்று, கோவிலில் வைக்கப்பட்ட உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி நடந்தது.ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சித்ராதேவி முன்னிலையில், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில், ஊழியர்கள், பக்தர்கள் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி நடந்தது.இதில், 71 லட்சத்து 32 ஆயிரத்து 801 ரூபாய் இருந்தது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.இது கடந்த, இரண்டரை மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!