சுந்தர மூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா
காஞ்சிபுரம்-சைவ சமய குரவர்களில் ஒருவரான, சுந்தர மூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா பெருநகரில் நடந்தது.தென்னாட்டில் சைவம் தழைத்தோங்க செய்த சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை,பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது.குருபூஜை விழாவையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவரது இரு மனைவியர், பரவையார், சங்கிலியாருக்கும் காலை, சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடந்தது.மாலை சுவாமி வீதியுலா நடந்தது. இதில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார், நான்கு மாட வீதிகள் வழியாக உலா வந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!