Load Image
dinamalar telegram
Advertisement

பழமை வாய்ந்த மகாதேவர் கோவிலில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?



ஸ்ரீபெரும்புதுார்--'எடையார்பாக்கத்தில் பழமைவாய்ந்த மகாதேவர் கோவிலில் கண்காணிப்பு கேமரா அமைத்து பராமரிக்க வேண்டும்' என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் எடையார்பாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த மகாதேவர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த இக்கோவிலை, தொல்லியல் துறை மூலம் கடந்த 2013ம் ஆண்டு பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டன.கல்வெட்டுகள் மூலம், இவ்வூர் இடையாற்றுப்பாக்கம் என்ற இராஜவித்யாதர சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில், கி.பி. 11ம் நூற்றாண்டில், துாங்காணை மாட வடிவில், இக்கோவில் கட்டப்பட்டதும் தெரிய வந்தது.தற்போது இந்த கோவில் பாதுகாப்பின்றி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலில் உள்ள துர்கை அம்மன் சிலையின் முகத்தை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கோவில் கதவு, பூஜை பொருட்களை தீ வைத்து மர்ம நபர்கள் எரித்துள்ளனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:இக்கோவில், சிறிதாக இருந்தாலும், தமிழகத்தின் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் உள்ளது. கோவில் முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இன்றி உள்ளது. கோவிலில் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்கின்றனர். கோவிலை சேதப்படுத்துகின்றனர். இக்கோவிலில் கண்காணிப்பு கேமரா அமைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement