Load Image
dinamalar telegram
Advertisement

துணை ஜனாதிபதியாகிறார். ஜக்தீப் தன்கர்!

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி :நாட்டின், 14வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக நேற்று காலையில் நடந்த தேர்தலின் முடிவு இரவில் வெளியானது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட, மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர், 71, அமோக வெற்றி பெற்றார். வரும், 11ம் தேதி அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
நாட்டின் மிகவும் உயரிய ஜனாதிபதி பதவிக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு வென்றார்.

இதற்கிடையே, தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10ல் முடிவடைகிறது.இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், புதுடில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி தான், ராஜ்யசபாவின் தலைவராகவும் இருப்பார்.துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர், ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

92.94 சதவீதம்



இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, 80, நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆல்வா, ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தவர்.இந்தத் தேர்தலில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், நியமன எம்.பி.,க்கள், லோக்சபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும். பார்லிமென்டில் மொத்தம், 788 எம்.பி.,க்கள் பதவி உள்ளது. இதில், எட்டு இடங்கள் காலியாக உள்ளன.
நேற்று காலை 10:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் காலையிலேயே வந்து ஓட்டளித்தனர். காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 'வீல் சேரில்' வந்து ஓட்டளித்தார்.காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் மதியத்துக்குப் பிறகு வந்து ஓட்டளித்தனர். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, பி.பி.இ., எனப்படும் முழு உடல் கவச உடை அணிந்து வந்து ஓட்டளித்தார்.
மாலை 5:00 மணி வரை நடந்த ஓட்டெடுப்பில், 725 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மொத்த எம்.பி.,க்களில், 92.94 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளதாக தேர்தல் கமிஷன்தெரிவித்துள்ளது.


இந்தத் தேர்தலில், 55 எம்.பி.,க்கள் ஓட்டளிக்கவில்லை. இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தக் கட்சிக்கு, லோக்சபாவில் 23 பேர் உட்பட 39எம்.பி.,க்கள் உள்ளனர்.அதே நேரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த சிசிர் குமார் அதிகாரி, திப்யேந்து அதிகாரி ஆகியோர் நேற்று ஓட்டளித்தனர்.

அமோக வெற்றி



பா.ஜ.,வைச் சேர்ந்த பிரபல நடிகர் சன்னி தியோல், சஞ்சய் தாத்ரே ஆகியோர் ஓட்டளிக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மூத்த தலைவர் சபிகுர் ரஹ்மான் பர்க் ஆகியோரும் ஓட்டளிக்கவில்லை.
ஓட்டுப் பதிவு முடிந்த உடன், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் அமோக வெற்றி பெற்று, வரும் 11ம் தேதி, நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கர் பதவி யேற்க உள்ளார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தன்கரை, பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நேற்று இரவு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்., மூத்த தலைவர் மார்க ரெட் ஆல்வாவும் ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


செல்லாத ஓட்டுகள்

பார்லிமென்டில் மொத்தம், 788 எம்.பி., பதவிகள் உள்ளன. இதில், எட்டு இடங்கள் காலியாக உள்ளன. துணை ஜனாதிபதி தேர்தலில், 725 பேர் ஓட்டளித்தனர். அதே நேரத்தில், 55 எம்.பி.,க்கள் ஓட்டளிக்கவில்லை. இதில், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த, 37 பேர் அடங்குவர்.ஓட்டளித்த 725 பேரில், 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஜக்தீப் தன்கருக்கு 528 ஓட்டுகள்கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவுக்கு 182 ஓட்டுகள்கிடைத்தன. மொத்தம், 346 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜக்தீப் தன்கர் அமோக வெற்றி பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (7 + 13)

  • sankar - சென்னை,இந்தியா

    இனி அஞ்சு வருஷம் ஜாலியா போயிடும்..

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    மிகத்தெளிவாக மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருக்குதே? அப்போ நிறைய அத்தியாவசியமான அரசியல் சட்ட மாறுதல்களை கொண்டுவரலாமே? உதாரணத்திற்கு, இந்தியாவை "ஹிந்து ராஷ்ட்ரம்" என அறிவித்து, மதசார்பின்மை வாதிகளின் வால்களை ஓட்ட நறுக்கிவிடலாமே? எதற்கு இந்த போலி மதசார்பின்மை? இந்துக்களுக்கு இந்த உலகில் ஒரு நாடாவது தங்கள் நாடு என கருத்திட்ட வாய்ப்பு கிடைக்குமே?

  • Tamilan - NA,இந்தியா

    .................

  • duruvasar - indraprastham,இந்தியா

    மீண்டும் துணை பிரதமந்திரி போட்டியில் சந்திகலாமா ?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    200 க்கு குறைவாக வாக்குவாங்கிவிட்டு திரனாமூல் ஆதரித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று புலம்புவது ரொம்பவே ஓவர்.

Advertisement