5 கிலோ கஞ்சா பறிமுதல்; 9 பேர் அதிரடி கைது
ஸ்ரீபெரும்புதுார்-- படப்பை அருகே 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒன்பது இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம் அருகே படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் உள்ள வன பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு பதுங்கி இருந்த ஒன்பது இளைஞர்களை பிடித்தனர்.விசாரணையில், பிடிப்பட்டவர்கள் கரசங்கால் பகுதியை சேர்ந்த ரவி, 20, புருஷோத்தம்மன், 22, அருண்குமார், 18, நந்தகுமார், 18, சூரியபிரதாப், 19, ஆரம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ், 18, லோகேஷ், 18, சாலமங்கலத்தை சேர்ந்த விஜய், 19, அய்யப்பன்,18, என்பது தெரிய வந்தது. இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!