Load Image
dinamalar telegram
Advertisement

சுத்தமான குடிநீர் வினியோகம் துவக்கம்



காஞ்சிபுரம்-பாலாற்றில் புதிய ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, களக்காட்டூர் கிராமத்தில் நேற்று முதல் சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு தெரு குழாய் மூலம் பாலாற்றில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்ததது.இந்நிலையில், ஜூலை மாதம், தெரு குழாயில் வரும் பாலாற்று குடிநீர் சுவை இல்லாமல், அழுக்கு துகளுடன் வந்தது. இதனால், கிராம மக்கள் குடிநீரை வடிகட்டி துணியால் வடிகட்டி பயன்படுத்தி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் 15ல் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, பாலாற்றில் ஆழ்துளை குழாயில் இருந்து வந்த, துாசு கலந்த குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு, ஆர்.ஓ., குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், ஊராட்சி பொது நிதியில் இருந்து, களக்காட்டூர் பாலாற்றில், புதிதாக ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நேற்று முதல் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement