Load Image
dinamalar telegram
Advertisement

கம்பீரமாக காட்சியளிக்கும் மணிமங்கலம் அரச மரம்



ஸ்ரீபெரும்புதுார்--மணிமங்கலம் கிராமத்தில் உள்ள அரச மரம் பல நுாற்றாண்டுகளாக மழை, புயலை சந்தித்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா மணிமங்கலம் கிராமத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான தர்மேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஒட்டி மிக பெரிய அரச மரம் உள்ளது. இந்த மரமும் கோவிலுக்கு நிகரான பழமையானது என கூறப்படுகிறது.பல நுாறு ஆண்டுகளாக, ஏராளமான புயல், மழை என இயற்கை சீற்றங்களை சந்தித்தும் இங்குள்ள அரச மரம் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குழந்தை பேறு மற்றும் பல்வேறு தோஷங்கள் நீங்க இந்த மரத்தை சுற்றி வந்து பலர் வழிபடுகின்றனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மரத்தடியில் இளைப்பாறி, மொபைல்போனில் 'செல்பி' எடுத்து செல்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement