ஓட்டுனரை தாக்கிகொள்ளை முயற்சி
மறைமலை நகர்-செங்கல்பட்டு, பூவையார் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 50; எம் - சாண்ட் லாரி ஓட்டுனர்.நேற்று முன்தினம் இரவு, மகேந்திரா சிட்டி பகுதியில் லாரியை நிறுத்தி உறங்கியுள்ளார். நள்ளிரவில், இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் மூவர், பாலாஜியிடம் கத்தியை காட்டி, மொபைல் போன், பணம் உள்ளிட்டவற்றை கேட்டு மிரட்டி உள்ளனர்.அவர் தர மறுக்கவே, தலை, கை போன்றவற்றில் கத்தியால் வெட்டி, தகராறில் ஈடுபட்டனர். அங்கு வந்த ரோந்து போலீசாரின் வாகன சத்தத்தை கேட்டு, மர்ம தப்பி ஓடினர். இதையடுத்து, பாலாஜி புகாரின்படி, மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!