Load Image
dinamalar telegram
Advertisement

களக்காட்டூர் ஊராட்சியில் கால்வாய் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்



காஞ்சிபுரம்,-'வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறும் வகையில், கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்' என, களக்காட்டூர் காந்தி ரோடு ஒட்டியுள்ள தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் வசிப்போரின் வீடுகளில் இருந்து வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி இல்லை.வீட்டில் தோட்டம் வைத்துள்ளவர்கள் வீட்டு உபயோக கழிவு நீரை தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இடவசதி இல்லாதவர்கள் வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாததால் . வீதியில் விடவேண்டிய நிலை உள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினரிடையே தகராறு ஏற்படுகிறது.எனவே, வீட்டு உபயோக கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் மேல்தளத்துடன் மழை நீர் வடிகால்வாய் ஏற்படுத்த வேண்டும் என, களக்காட்டூர் தெரு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement