புகார் பெட்டி..
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை
ஸ்ரீபெரும்புதுாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.பள்ளி கட்டடத்திற்கும், மைதானத்திற்கும் இடையே பொது வழி செல்கிறது. இந்த வழியே அதிக வாகனங்கள் செல்கின்றன. இதனால், மாணவர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.- -கே.தாமோதரன், ஸ்ரீபெரும்புதுார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!