பா.ம.க.,கொடி சேதம்
ஸ்ரீபெரும்புதுார்--பா.ம.க.,கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வெங்காடு ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு பா.ம.க., சார்பில் கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த கம்பத்தில் இருந்த கட்சி கொடியை கீழே இறக்கிய மர்ம நபர்கள் கொடியை சேதப்படுத்தியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பா.ம.க., நிர்வாகிகள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!