Load Image
dinamalar telegram
Advertisement

ஆடி திருவிழா கூழ்வார்ப்புதண்டு கீரைக்கு கிராக்கி



காஞ்சிபுரம்-ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடிதிருவிழாவையொட்டி அம்மன் கோவில்களிலும், வீடுகளிலும் கூழ்வார்க்கப்படுகிறது. அம்மனுக்கு படையலிடப்படும் கருவாட்டு குழம்பில், தண்டு கீரையை சேர்ப்பது வழக்கமாக உள்ளது.இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள வட்டாரத்தில், ஆடிதிருவிழாவையொட்டி தண்டு கீரை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டு தண்டு கீரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் தண்டு கீரைக்கு கிராக்கி ஏற்பட்டது.தண்டு கீரை சாகுபடி செய்த விவசாயிகள் நேரடியாக 20 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள், 40 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement