ரத்த தானம் முகாம்
காஞ்சிபுரம்-இந்தியன் வங்கி நிறுவன நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.இந்தியன் வங்கி 116வது நிறுவன நாளை முன்னிட்டு இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராம் துவக்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் வரதராஜன் ரத்ததானம் பயன் குறித்து எடுத்துரைத்தார். இந்தியன் வங்கி பணியாளர்கள் ரத்ததானம் செய்தனர். சென்னை டி.டி.கே. வி.எச். எஸ்., ரத்த வங்கி மருத்துவர்கள், செவிலியர்கள், ேஹாஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் இந்தர்சந்த், சங்கரா பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக அலுவலர் நந்தகுமார் மற்றும் டிரஸ்டி ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!