Load Image
dinamalar telegram
Advertisement

காஞ்சி / புகார் பெட்டி



பாதாள சாக்கடை

அடைப்பு நீக்கப்படுமா?சின்ன காஞ்சிபுரம், 24வது வார்டுக்கு உட்பட்ட கே.எம்.வி., நகரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த இரு மாதங்களுக்கு மேலாக, மேன்ேஹால் வழியாக கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தால், லாரி மூலம் கழிவு நீர் ஊறிஞ்சபடுகிறதே தவிர, முழுதுமாக அடைப்பை நீக்கி கழிவு நீர் வெளியேறாமல் இருக்க நிரந்தர தீர்வு காணவில்லை. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், இரவில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. இதனால், தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே, கே.எம்.வி., நகரில் பாதாள சாக்கடை அடைப்பை முழுதுமாக நீக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எம்.சந்திரன், காஞ்சிபுரம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement