Load Image
dinamalar telegram
Advertisement

கூட்டுறவு துறை ஊழியர்கள் பட்டய பயிற்சிக்கு அழைப்பு



காஞ்சிபுரம்-'அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு, விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா கூட்டுறவு மேலாண் நிலைய முதல்வர் அறிவித்து உள்ளார்.காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் நிலைய முதல்வர் உமாபதி அறிக்கை:கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு பட்டயப் பயிற்சி நிறைவு செய்யாத நிரந்தர பணியாளர்களுக்கு, 22வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வரும் 22ம் தேதி துவங்க உள்ளது.இந்த பயிற்சியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் சேரலாம். பயிற்சி கட்டணமாக, 15 ஆயிரத்து 50 ரூபாய் வசூலிக்கப்படும். காஞ்சிபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நேரிடையாக சென்று, 100 ரூபாய் செலுத்தி, வரும் 12ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 17ம் தேதி வரை வழங்கலாம். விபரங்களுக்கு 044- - 27237699 தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement