Load Image
dinamalar telegram
Advertisement

வெள்ள பாதிப்பு: எம்.எல்.ஏ., பார்வை



சிதம்பரம்-வெள்ள பாதிப்பு பகுதிகளை பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார்.கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2.5 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடக்கரையோரத்தில் உள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, மேலகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 4 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.தெருக்களில் வெள்ளம் ஓடுவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. தகவல் அறிந்த பாண்டியன் எம்.எல்.ஏ., வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து நிவராணம் வழங்கி, ஆறுதல் கூறினார். அ.தி.மு.க., நிர்வாகிகள் குமார், செழியன், சுந்தரமூர்த்தி, ராசாங்கம், ரங்கம்மா உடன் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement