Load Image
dinamalar telegram
Advertisement

கிரைம் செய்திகள்
ஹான்ஸ் விற்பனை: ஒருவருக்கு வலை


விருத்தாசலம்: சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

காட்டுக்கூடலுார் சாலையைச் சேர்ந்த ேஷாபாராம், 33, தனது மளிகை கடையில், கள்ளத்தனமாக ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றது தெரிய வந்தது.போலீசார் வழக்குப் பதிந்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ேஷாபராமை தேடி வருகின்றனர்.

இருதரப்பு மோதல்: நால்வர் மீது வழக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, 31; என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. அதேபகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 67, ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரி.ராஜீவ்காந்தி வீட்டில் இருந்த வேப்பமரம் தொடர்பாக இருவருக்கும், நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. கோவிந்தசாமி, மகன் இளையராஜா, 38, ராஜிவ்காந்தி, தாய் வாசுகி ஆகியோர் தாக்கி கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் கோவிந்தசாமி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தார் மிஷினில் சிக்கி வாலிபர் படுகாயம்
விருத்தாசலம்: விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இதற்காக மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் தார் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, பீகார் மாநிலம், ஹச் மாவட்டத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் மகன் ரோஹித், 25, என்பவர், தார் மிஷினை இயக்கி வந்தார்.இந்நிலையில், நேற்று வழக்கம்போல் மிஷினை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக அவரது இடது கை மிஷினில் மாட்டி பலத்த காயமடைந்தார். புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி மகாலட்சுமி, 29. இவரது வீட்டில் இருந்த தகர ஷீட்டை, அதேபகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கல்லால் தாக்கி சேதப்படுத்தினார்.தட்டிக்கேட்ட மகாலட்சுமியை, வேல்முருகன், மனைவி செல்வராணி ஆகியோர் அசிங்கமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், வேல்முருகன், செல்வராணி மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

பெண் தற்கொலை
குள்ளஞ்சாவடி: அனுக்கம்பட்டு, மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ஜெயந்தி, 45. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெயந்தி தனியார் வங்கி ஒன்றில், 6 லட்சம் கடன் பெற்று வீடு கட்டினார். இரண்டு மாதங்களாக தவணை செலுத்தாததால் வங்கியில் இருந்து கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அண்ணன், தம்பி மீது நில அபகரிப்பு வழக்கு
கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி உஷாராணி. இவர், கடலுார் நில அபகரிப்பு பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.

அதில், பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தில், தனக்கு 20 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த சொந்ததை எனது தந்தை, எனக்கு உயில் எழுதி கொடுத்தார். தந்தையின் சகோதரர் மகன்களான பண்ருட்டி, திருநகர் விரிவாக்கத்தில் வசிக்கும் சுதர்சனன், அவரது தம்பி சத்தியநாராயணன் ஆகியோர், அந்த சொத்தை அபகரித்து விற்க முயற்சித்து வருகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டதன்பேரில், சுதர்சனன், சத்தியநாராயணன் மீது கடலுார் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement