சிறப்பு மருத்துவ முகாம்எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கடலுார்-அழகியநத்தம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.கடலுார் அடுத்த அழகியநத்தம் ஊராட்சியில் 'வரும் முன் காப்போம்' திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் பிரவின் அய்யப்பன், வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா தேவி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் முத்துக்குமாரசாமி வரவேற்றார்.நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், ஊராட்சித் தலைவர்கள் கனகராஜ், சரவணன், நாராயணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, சர்க்கரை நோய் உட்பட பல்வேறு வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!