ADVERTISEMENT
பண்ருட்டி-பண்ருட்டி அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் ஆய்வு செய்தனர்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுரம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க 29 ஏக்கர் பரப்பளவில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்த இடத்தை அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் அப்பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா கீழ் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 3 ஏக்கர் பரப்பளவில் 44 கோடியே 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 504 குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், சிறு குறு நடுத்தர தொழில்துறை செயலாளர் அருண்ராய், சிட்கோ மேலாண் இயக்குனர் ஆனந்த், தாசில்தார் கார்த்திகேயன், துணை பி.டி.ஒ., பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஸ்டிக்கர் ஒட்டும் ஆய்வு தானே.