தாசில்தாரை பெண்கள் முற்றுகை; விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
விருத்தாசலம்-விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நகரில், ஆலடி சாலையில் உள்ள வாரி ஓடை, ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிர்புறம் 4.5 ஏக்கர் முல்லா ஏரி, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் உள்ள 1.25 ஏக்கர் நீர்ப்பிடிப்பு தாங்கல் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டன. பொதுநல வழக்கின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றிட, ஐகோர்ட் உத்தரவிட்டது.ஆக்கிரமிப்பை தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறையினர் அளவீடு செய்து, கடந்த மாதம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொது மக்கள் எதிர்ப்பால் பணிகள் தடைபட்டது.இந்நிலையில், நாளை (8ம் தேதி) ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதையடுத்து, ஆலடி சாலையில் நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.அங்கிருந்த குடியிருப்பு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது, 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில், இங்கிருந்த அப்புறப்படுத்தினால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என அப்பகுதி பெண்கள், தாசில்தார் தனபதியை முற்றுகையிட்டு, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!