Load Image
dinamalar telegram
Advertisement

தீமிதி திருவிழா...



பெண்ணாடம்-சவுந்திரசோழபுரம் கருமாரியம்மன் கோவில், தீமிதி உற்சவம் நடந்தது. பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் கருமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவ விழா, கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து தீமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் ஆடித் திருவிழா நிறைவடைந்தது.இதேபோன்று, கொத்தட்டை, இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement