Load Image
dinamalar telegram
Advertisement

இல்லந்தோறும் தேசிய கொடி திருவள்ளூரில் விழிப்புணர்வு

Tamil News
ADVERTISEMENT
திருவள்ளூர்:நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு, இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆக. 13 - 15ம் தேதி வரை, இல்லந்தோரும் தேசிய கொடி ஏற்றும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ளது.வீடுகளுக்கு மூவர்ண கொடியை, அஞ்சல் துறை அலுவலகங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட, 329 அஞ்சலகங்களிலும், 20 அங்குலம் அகலம், 30 அங்குலம் நீளமும் கொண்ட, தேசிய கொடி, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரணி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் பாபு தலைமை வகித்தார்.

உதவி கோட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, தலைமை தபால் அலுவலர் ரேவதி மற்றும் தபால்காரர்கள், ஊழியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.பொதுமக்கள் தேசிய கொடியை, அனைத்து தபால் அலுவலகங்களிலும் பெற்று, வீடுகளில் மூன்று நாட்களும் ஏற்றி வைக்குமாறு, கோட்ட கண்காணிப்பாளர் பாபு கேட்டுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    உங்க மாவட்டத்துல தொழுதாவூர் ஏரியை ஆக்ரமிச்சு அபூர்வமான ஒரு வீடு இருக்காமே? அங்கே மறக்காம கொடி ஏத்தி இடிஞ்ச வீட்டு மக்களுக்கெல்லாம் இனிப்பு குடுங்க. மகாத்மா ஆன்மா சாந்தி அடையும்.

Advertisement