ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா
நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சள்நீராட்டு விழா நடந்தது.சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று முன்தினம் செடல் திருவிழா நடந்தது. விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வீதி உலா நடந்தது.கடந்த 2ம் தேதி சாகை வார்த்தல், 4ம் தேதி காலை 10:00 மணிக்கு பட்டு சாத்தும் வைபவம், இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது.5ம் தேதி வெள்ளிக்கிழமை செடல் திருவிழா நடந்து, இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று 6ம் தேதி மதியம் அபிஷேக ஆராதனைகள் நடந்து, இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!