ADVERTISEMENT
அச்சிறுப்பாக்கம்:''அரசு விளம்பரம் தொடர்பாக சுவர் ஓவியம் வரைவோர், சதுர அடிக்கு கூடுதலாக 15 ரூபாய் கிடைத்தால் வாழ்வாதாரம் மேம்படும்,'' என, ஓவியர் கணேஷ் கூறினார்.
அச்சிறுப்பாக்கம் மார்வர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுவரில், மாணவ - மாணவியர் மனதில் தேச தலைவர்கள், இயற்கை சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக ஓவியங்கள் வரையப்படுகின்றன.
இப்பணியில் ஈடுபட்டுள்ள, சுவர் விளம்பரம் வரையும் கலைஞர் ரா.கணேஷ், 60, என்பவர் கூறியதாவது:'பேனர், போஸ்டர்' உள்ளிட்டவற்றின் வருகையால், ஓவிய கலைஞர்கள் வருவாய் இழந்து, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பலர், சுவர் ஓவியம் வரையும் தொழிலில் இருந்து விலகி, வேறு தொழில்களுக்கும் சென்றுவிட்டனர். இந்நிலையில், ஆபத்து விளைவிக்கும் வகையில் பேனர் வைக்க நீதிமன்றம் தடை செய்ததால், சுவர் விளம்பரத்துக்கு மீண்டும், 'மவுசு' ஏற்பட்டுள்ளது.
அரசியல் ஓவியங்கள் வரைந்து கொடுத்தாலும், சரிவர பணம் கைக்கு வருவதில்லை. இதனால், அரசு நிர்வாகத்திற்காக ஓவியம் வரையும் பணிகளை செய்கிறோம்.பெயின்ட் உட்பட அனைத்தும் சேர்த்து, ஒரு சதுர அடி சுவர் ஓவியம் வரை, அரசு நிர்வாகம் 65 ரூபாய் கூலி தருகிறது.கொடுக்கப்படும் படத்தின் வடிவம் பொறுத்து, ஓவியம் வரைய கூடுதல் நேரம் அமைகிறது.
குறைவான வருமானம் என்றாலும், சரியாக கிடைப்பதால் நிம்மதியாக இருக்கிறது.எனினும், சதுர அடிக்கு கூடுதலாக 15 ரூபாய் சேர்த்து 80 ரூபாய் வழங்கினால், சுவர் ஓவியம் வரைவோரின் வாழ்வாதாரம் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!