Load Image
dinamalar telegram
Advertisement

கட்டணமில்லா சிகிச்சை: ஓய்வூதியர்கள் கோரிக்கை



கடலுார்-தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க கடலுார் கிளை (கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய), பேரவை கூட்டம், நடந்தது.கடலுார் கிளை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். செயலாளர் தேவராஜ், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தனர். தலைவர் காசிநாதன், முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில இணைச்செயலாளர் சவுந்தரராஜ், பொருளாளர் ஜோதி வீரபாண்டியன் சிறப்புரையாற்றினர். பொதுச்செயலாளர் ராஜகுமார், பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் வாழ்த்தி பேசினர்.கூட்டத்தில், கடலுாரில் அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும். 80 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் கூடுதலாகவும், 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாகவும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சைக்கு அரசு ஆவன செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர் தனபால் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement