Load Image
dinamalar telegram
Advertisement

மாரியம்மன் கோவிலுக்கு கஞ்சிக்கலய ஊர்வலம்



விருத்தாசலம்-விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் பூதாமூர் மகா செங்கழனி மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.நேற்று முன்தினம் செடல் திருவிழா நடந்தது. நேற்று மஞ்சள் நீர் உற்சவத்தையொட்டி, மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.இன்று ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வரும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement