அடுக்குமாடி குடியிருப்பு கட்டஎதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்
பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வார்டு மக்கள் 'போஸ்டர்' ஒட்டியதால் பரபரப்பு நிலவியது.பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சி, திருமலை அகரத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடம், நான்கு மாதங்களுக்கு முன் குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தேர்வு செய்யப்பட்டது.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பினர். அந்த இடத்தை, அமைச்சர்கள் கணேசன், அன்பரசன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் பார்வையிட வருவதாக கிடைத்த தகவலின்பேரில், கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிகழ்ச்சி ரத்தானது.இந்நிலையில், 'வேண்டாம்... வேண்டாம் எங்கள் கிராமத்திற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் வேண்டாம்' என ஊர் பொது மக்கள் சார்பில் நேற்று அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!