Load Image
dinamalar telegram
Advertisement

தேன்பாக்கம் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

Tamil News
ADVERTISEMENT
அச்சிறுப்பாக்கம்:தேன்பாக்கம் கிராம கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா, விமரிசையாக நடந்தது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த தேன்பாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா, ஜூலை 29ம் தேதி துவங்கியது. நேற்று காலை, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும், மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கோவிலின் முன் அமைக்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் தீ மிதித்து, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.பின் கன்னியம்மன், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு, தெருக்கூத்து நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement