Load Image
dinamalar telegram
Advertisement

கிரைம் செய்திகள்: பெண் மானபங்கம்: தந்தை, மகனுக்கு வலை

புவனகிரி:உடையூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சுபவேலன். இருவரும், அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டு வாசலில் நின்று கொண்டு ஆபாசமாக திட்டினர்.தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சேலையை இழுத்து அவமானப்படுத்தி, தாக்கினர். காயமடைந்த அப்பெண் சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புகாரின் பேரில் ஆறுமுகம், சுபவேலன் ஆகியோர் மீது புவனகிரி போலீசார் வழங்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

பெட்டிக்கடை எரிந்து சேதம்
புவனகிரி:மருதுார், கோவில் தெரு வீரமணி,60; நத்தமேடு நான்குமுனை சாலையில் பெட்டிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 10:30 மணி அளவில் கடை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து மருதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தந்தை மாயம்: மகன் புகார்
சேத்தியாத்தோப்பு:வெள்ளியக்குடி, பெரிய தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, 63; இவரை கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் நன்மாறன் அளித்த புகாரின் பேரில், ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, பழனிச்சாமியை தேடி வருகின்றனர்.

ஒருவரை தாக்கிய மூவர் கைது
சேத்தியாத்தோப்பு:பரதுார் செல்லியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி வெள்ளி திருவிழா நடந்தது. விழாவில், அன்ன தானம் செய்யப்பட்டது. அப்போது வடக்குத் தெரு அய்யப்பன், 47. ஆதரவற்ற மூதாட்டி ஒருவருக்கு உணவு வாங்கி கொடுத்தார்.அங்கு வந்த சிவராஜ் நகர் சீனிவாசன் மகன் சஞ்சய், 21; மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் அய்யப்பனிடம் ஊர் பெயர் தெரியாத மூதாட்டிக்கு எப்படி உணவு வாங்கி தரலாம் என கேட்டு, அவரை ஆபாசமாக திட்டி, தாக்கினர். காயமடைந்த அய்யப்பன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து சஞ்சய் மற்றும் சிறுவர்கள் இருவரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

மகள் சாவில் சந்தேகம்: தந்தை போலீசில் புகார்
கடலுார்:கோண்டூர், எஸ்.என்.சாவடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 33; கடலுார் சிப்காட்டில் சோலார் ஆக்டிவ் பார்மா நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அடுத்த காரக்கோட்டை தங்கமுத்து மகள் அபிநயா, 23; என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார்.கிருஷ்ணகுமார் உடல் நிலை பாதித்து, ஓய்வில் இருந்தார். அபிநயாவுக்கு சரியாக சமையல் செய்ய தெரியாததால், கணவருக்கு சமைத்து கொடுக்க முடியவில்லையே என மன வேதனையில் இருந்தார்.கடந்த 30ம் தேதி அபிநயா உணவில் எலி பேஸ்ட்டை கலந்து சாப்பிட்டு மயங்கினார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.அவரது தந்தை தங்கமுத்து, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement