Load Image
dinamalar telegram
Advertisement

பெண்களை ஆபாசமாக திட்டி தாக்கிய 7 பேர் மீது வழக்கு



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே பெண்களைத் தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகள் டயானா, 23; இவரும் இவரது தாய் அன்னலட்சுமி, பெரியம்மா தனலட்சுமி ஆகிய மூவரும் கடந்த 26ம் தேதி நடந்து சென்றனர். அப்போது எதிர் வீட்டில் உள்ள ஏழுமலை மற்றும் அவரது தரப்பினர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது என கூறி ஆபாசமாக திட்டி தாக்கினர்.இதுகுறித்து டயானா கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, 33; வெங்கடாஜலபதி, 32; கோகுல், 20; வேல்விழி, 27; நர்மதா, 36; ரபேகா, 26; பழனியம்மாள், 45; ஆகிய 7 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement