ரூ.2.15 லட்சம் நகை, பணம் திருட்டு
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில், கார் கண்ணாடியை உடைத்து 2.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம், 34; சென்னை, அம்பத்துாரில் தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு கடந்த 3ம் தேதி இரவு ஹூண்டாய் காரில் சென்று கொண்டிருந்தார். 8:45 மணியளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திச் சென்றார்.சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது, காரின் இடது பக்க கண்ணாடியை உடைத்து காரில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்த பை திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து அப்துல்கரீம் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!