பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்; ஊராட்சி தலைவர் கணவர் மீது வழக்கு
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே ஒன்றிய கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி தலைவரின் கணவர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த நெடுமானுாரைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி விமலா, 45; ஒன்றிய கவுன்சிலர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதா. ஊராட்சி தலைவர். இருவருக்கும் இடையே தேர்தல் மற்றும் கோவில் விழா நடத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் விமலா, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை பணிகளை மேற்கொண்டார். இதற்காக ஏரியிலிருந்து டிராக்டர் மூலம் மண் கொட்டினார்.அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவரின் கணவர் வெங்கடேசன் தரப்பினர் ஊராட்சி நிர்வாகத்தை கேட்காமல் எப்படி மண் எடுக்கலாம் எனக்கேட்டதால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வெங்கடேசன் தரப்பினர், விமலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.விமலா அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், குமார், சதீஷ், தேன்மொழி, கார்த்திக், ராம்குமார், காசிநாதன் ஆகிய 7 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!