மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறல்
தாம்பரம், பல்லாவரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.பல்லாவரம் அடுத்த திரிசூலம் மங்கள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன், 22. இவர், திரிசூலம் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியை, ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்.இவர், திரிசூலம் பகுதியைச் சேர்ந்த 11 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது சிறுமியின் பெற்றோர் திடீரென வீட்டுக்கு வந்ததும், செய்வதறியாது அவர்களை தாக்கி, காளியப்பன் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.இது குறித்த புகாரையடுத்து, தாம்பரம் மகளிர் போலீசார் காளியப்பனை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!