Load Image
dinamalar telegram
Advertisement

போலீசாரின்11 வாகனங்கள்ஏலம்


சென்னை போலீசார் பயன்படுத்திய 11 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன.இது குறித்து, ஊர்க்காவல் படை கூடுதல் காவல் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில், 2வது தளத்தில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட, ஏழு நான்கு சக்கர வாகனங்கள், நான்கு இரண்டு சக்கர வாகனங்கள் என, 11 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.அதன்படி, 23ம் தேதி காலை 11:30 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது.பங்கேற்போர் காலை 11:15 மணிக்குள், முன் பணமாக 1,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement