Load Image
dinamalar telegram
Advertisement

சாராயம் விற்ற 2 பேர் கைது



கள்ளக்குறிச்சி-சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் அருகே, சாராயம் விற்ற தகரை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி, 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.அதேபோல், பூசப்பாடி மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற மூங்கில்பாடி பூபதி, 42; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement