Load Image
dinamalar telegram
Advertisement

டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்புதெருவில் அமர்ந்து பெண் போராட்டம்

ஆலந்துார், வீட்டின் முகப்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பி.எஸ்.என்.எல்., பெண் ஊழியர் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.சென்னை, ஆலந்துார், மாதவரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் தீபா, 31; பி.எஸ்.என்.எல்., ஊழியர்.மின் தட்டுப்பாட்டை தவிர்க்க, மாதவரம் கிழக்கு தெருவில் தீபா வீட்டு முகப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையறிந்த தீபாவின் கணவர் சங்கமித்திரன், 'தான் பழைய வீட்டை அகற்றி புதிய வீடு கட்ட உள்ளதாகவும், அதன் வாசல் வரும் பகுதியில் மின் மாற்றி அமைக்க வேண்டாம்' என, மின் வாரியத்தில் மனு அளித்திருந்தார்.இந்த நிலையில், மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு தீபா எதிர்ப்பு தெரிவித்தார். 160வது வார்டு கவுன்சிலர் பிருந்தாவின் தந்தை முரளிகிருஷ்ணன் உத்தரவுப்படி மின்மாற்றி அமைப்பதாக கூறி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சமாதான பேச்சு நடத்தினர். இச்சம்பவத்தால் மின்மாற்றி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement