Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ்காரர் வீட்டில்திருடர்கள் கைவரிசை

மயிலாப்பூர், காற்றுக்காக கதவை திறந்து வைத்து துாங்கிய போலீஸ்காரரின் வீட்டில் புகுந்து, திருடர்கள் கைவரிசை காட்டி சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மயிலாப்பூர் ராஜசேகரன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் பிரபுதேவன், 29. இவர் சென்னை பெருநகர காவல் துறையின் ஆயுதப்படை போலீஸ்காரர். நேற்று முன்தினம் இரவு, காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை அவர் எழுந்தபோது, வீட்டில் இருந்த அரை கிலோ வெள்ளிப் பொருட்கள், விலை உயர்ந்த இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement