Load Image
dinamalar telegram
Advertisement

2 குழந்தைகளின் தாய் மாயம்போலீஸ் விசாரணை



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பூங்குணம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி தமிழரசி, 32; திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். தமிழரசி உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள சகோதரி தேன்மொழி வீட்டிற்கு வந்தார். கடந்த 29ம் தேதி உடல்நிலை சரியில்லை என 2 குழந்தைகளுடன் வீட்டிலிருந்து சென்ற தமிழரசி மீண்டும் வீடு திரும்பவில்லை.தேன்மொழி கொடுத்து புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement