Load Image
dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்பனைபெண் தாதாக்கள் கைது

Tamil News
ADVERTISEMENT

கொடுங்கையூர் கொடுங்கையூரில், கத்திமுனையில் கஞ்சா விற்ற பெண் தாதாக்கள் உட்பட ஒன்பது பேரை, போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர், இந்திரா நகர், கைலாசம் தெருவில், வீடு ஒன்றில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது, 12 கிலோ கஞ்சா, ஐந்து கத்திகள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்தனர்.விசாரணையில், கொடுங்கையூர், இந்திரா நகரை சேர்ந்த தாரணி, 24, அவரது அக்காள் வினோதினி, 25; திருநங்கை ஹரிதா, 22, நெற்குன்றத்தைச் சேர்ந்த மதன், 22, உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. இதில், தாரணி மீது, அவரது கணவரை கொன்ற வழக்கு உள்ளது. வினோதினி மீது கஞ்சா வழக்கு உள்ளது.இருவரும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, அடியாட்களை வைத்து கத்திமுனையில் விற்பனையில் ஈடுபட்டு, தாதா போல் வலம் வந்தது தெரியவந்தது. ஒன்பது பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement