கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற மேம்பாட்டுதிட்ட வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி நகராட்சியில் 121 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏமப்பேரில் நடந்த குளம் அமைக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி, குளக்கரையின் மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும், பூங்கா அமைப்பதற்கான பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.தொடர்ந்து ஏமப்பேர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி குடிநீர் வழங்கிடவும், நீரினை குளோரின் கலந்து தூய்மையாக விநியோகித்திட அறிவுறுத்தினார்.பின், 148.58 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணியினையும், சீதாராமன் நகரில் 115 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயலு, கமிஷனர் குமரன், பொறியாளர் முருகன், நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், பணி மேற்பார்வையாளர் முகமது சுபேர், ஆய்வாளர் கோபிநாத் மற்றும் கார்த்திக், சதீஷ் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!