கழிவுநீர் கால்வாய்களில் துார் வாரும் பணி
திருக்கோவிலுார்-திருக்கோவிலுாரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் துார் வாரும் பணி நடந்தது.மழைக் காலங்களில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் கழிவு நீர் கால்வாய்களை துாய்மைப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில், நகர மன்ற தலைவர் முருகன், கமிஷனர் கீதா ஆகியோர் முக்கிய கழிவுநீர் கால்வாய்களை ஜே.சி.பி., மூலம் துார் வார உத்தரவிட்டனர்.அதன்பேரில், துப்புரவு ஆய்வாளர் ராஜா தலைமையில், மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் உதவியுடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் உள்ளிட்ட முக்கிய கால்வாய்களில் துார் வாரும் பணி நடந்தது. இப்பணியை கமிஷனர் கீதா ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!