Load Image
dinamalar telegram
Advertisement

அம்மன் கழுத்தில் 10 சவரன்தாலி திருடிய வாலிபர் கைது

Tamil News
ADVERTISEMENT

வியாசர்பாடி,
வியாசர்பாடியில், அம்மன் கழுத்தில் 10 சவரன் தாலி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை சேர்ந்தவர் ராஜம்மாள், 38. இவர், அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலை நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கோவிலுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்து இருந்தது. அம்மன் கழுத்தில் கிடந்த,10 சவரன் தாலி திருடு போயிருந்தது.இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியில் நேற்று ரோந்து பணியில் இருந்த போலீசார், அம்பத்துார், கள்ளிக்குப்பம், கங்கை நகரை சேர்ந்த விக்னேஸ்வரன், 23, என்பவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்ததை பார்த்தனர். அவரிடம், 10 சவரன் தாலி இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், அம்மன் கழுத்தில் இருந்து அந்த தாலியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement