Load Image
dinamalar telegram
Advertisement

கிஷான் திட்டத்தில் ஆதார் இணைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு:பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில், பதிவு செய்த விவசாயிகள், தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் அறிக்கை:பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில், பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கான அடுத்த தவணை கிடைக்கும்.இதனால், விவசாயிகள் 'இ- - கேஒய்சி' செயல்முறையை கட்டாயம் செய்திருக்க வேண்டும்.
ஆதார் அங்கீகாரத்தை பொறுத்து, இரு வழியில் இணைக்கலாம். pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது 'பிஎம்கிஷான்' எனும் செயலியில், பயனாளிகள், தங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவிட்டால் இணையலாம்.இதில் சிரமம் ஏற்படுவதாக கருதினால், பயனாளிகள் பொது சேவை மையத்தை அணுகி 15 ரூபாய் செலுத்தி ஆதார் விபரங்களை இணைக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement