வாசிப்பு மாரத்தான் போட்டி; மாணவர்களுக்கு சி.இ.ஓ., பாராட்டு
சங்கராபுரம்-வாசிப்பு மாரத்தான் போட்டியில் மாநில அளவில் சாதனை புரிந்த சங்கராபுரம் பகுதி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வாசிப்பு மாரத்தான் போட்டியில் சங்கராபுரம் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், மாநில அளவில் 12ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். அதனையொட்டி, மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாபிள்ளை, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!